இந்தியா

கொரோனா சிகிச்சைப் பெறுபவர்களின் மனநிலை - கேரள முதலமைச்சர் அட்வைஸ்!

webteam

கொரோனா சிகிச்சைப் பெறுபவர்களின் மனநிலையில் அக்கறைக் காட்டுவது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுரை தெரிவித்துள்ளார்

உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதித்த மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. கேரளாவில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு அம்மாநில அரசு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. பலர் கண்காணிப்பில் இருக்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா சிகிச்சைப் பெறுபவர்களின்  மனநிலையில் அக்கறைக் காட்டுவது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுரை தெரிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர்,

கொரோனா சிகிச்சையின்போது தனிமை மற்றும் மன அழுத்தம் பலருக்கும் கடினமானதாக இருக்கும். இது மிகவும் இயற்கையானது என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். செய்தி உங்களை கவலையடையச் செய்தால் அதைக் கட்டுப்படுத்துங்கள்.

உங்கள் மருத்துவர் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் மருந்து மாத்திரைகளை சரியாக உட்கொள்ளுங்கள். புத்தகம் படிப்பது, இசை, ஓவியம், உடற்பயிற்சி போன்றவற்றை செய்யுங்கள். நாம் மீண்டுவருவோம் என தெரிவித்துள்ளார்.