கேரள தங்கக்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷை தனக்குத் தெரியும் என்று, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மீண்டும் ஒரு முறை விளக்கமளித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு தங்கம் கடத்தப்பட்ட வழக்கை, என்ஐஏ, சுங்கம் மற்றும் அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கினால் கேரள அரசியலிலும் புயல வீசி வருகிறது.
அண்மையில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், முதல்வருக்குத் தெரிந்துதான், ஸ்வப்னாவுக்கு அரசுப்பணி வழங்கப்பட்டதென குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுடன் பேசிய பினராயி விஜயன், ஐக்கிய அரசு அமீரகத்தின் தூதர் தன்னை பல முறை சந்திக்க வந்ததாகவும், அப்போதெல்லலாம் அவருடன் ஸ்வப்னா சுரேஷ் வந்ததாகவும் குறிப்பிட்டார்.
முதலமைச்சரை தூதர் ஒருவர் அடிக்கடி சந்திப்பது வாடிக்கைதான் என்று குறிப்பிட்ட பினராயி, சிவசங்கரனுக்கும் ஸ்வப்னாவுக்குமான உறவு பற்றி தனக்குத்தெரியாது என்று கூறினார்.