பினராயி விஜயன் முகநூல்
இந்தியா

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்.. ஆதரவு தெரிவித்த பினராயி விஜயன்!

அனைத்து கட்சி கூட்டத்தில் அவரே பங்கேற்பாரா என்பது குறித்து, அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.

PT WEB

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்திற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மத்திய அரசின் நடவடிக்கை, ஒருதலைபட்சமானது என விமர்சித்துள்ளார்.

இருப்பினும், அனைத்து கட்சி கூட்டத்தில் அவரே பங்கேற்பாரா என்பது குறித்து, அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.

பினராயி விஜயன் தனது மற்றொரு அறிக்கையில், மக்களவை தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், மத்திய அரசு அனைவரின் கருத்துகளையும் கவனத்தில் கொண்டு முடிவெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களுக்கு தற்போதுள்ள விகிதாசார அடிப்படையிலான இடங்கள் குறையக்கூடாது எனவும் கூறியுள்ளார். மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவே, 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு தொகுதி மறுசீரமைப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், ஆனால் இன்னும் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படாத சூழல் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், தமிழச்சி தங்கபாண்டியனும், பினராயி விஜயனை சந்தித்து, முதல்வரின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.