ஒடிஸாவில் நடைபெற்ற முதுகலை மருத்துவ நுழைவுத்தேர்வு தொடங்கிய சில நிமிடங்களிலேயே வினாத்தாள் வாட்ஸ்அப் குழுவில் கசிந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடுமையான சோதனைகள் இருந்தும் ஒருவர் செல்போன் கொண்டு சென்று வினாத்தாளை படம் எடுத்து பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் குழு அட்மின் உட்பட தொடர்புடையவர்களை கண்டறிய அதிகாரிகள் டிஜிட்டல் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.
ஒடிஸாவில், முதுகலை மருத்துவ நுழைவுத்தேர்வு (postgraduate medical entrance examination) தொடங்கிய சில நிமிடங்களிலேயே, வாட்ஸ்அப் குழுவில் வினாத்தாள் கசிந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பலத்த சோதனைகளுக்குப் பிறகும் தேர்வு மையத்திற்குள் செல்போன் கொண்டுசென்று, வினாத்தாளை புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக வாட்ஸ்அப் குழுவின் அட்மின் உட்பட, இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிய டிஜிட்டல் ஆதாரங்களை அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். இதனிடையே, "இரட்டை இன்ஜின் அரசின் கீழ் வினாத்தாள் கசியவிடும் மாஃபியாக்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது.