இந்தியா

பெட்ரோல் விலை ரூ100ஐ தாண்டாது..! எப்படி தெரியுமா?

பெட்ரோல் விலை ரூ100ஐ தாண்டாது..! எப்படி தெரியுமா?

rajakannan

இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ100ஐ தாண்டாது என வாடிக்கையாளர் ஒருவர் கிண்டலாக தெரிவித்துள்ளார். 

கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே பெட்ரோல் டீ‌சல் விலை அதிகரிப்பது தொடர்கதையாகியுள்ளது. பைசா பைசாவாக ஏறிய பெட்ரோல் விலை தற்போது இந்தியாவின் சில பகுதிகளில் ரூ.90ஐ எட்டியிருக்கிறது. மற்ற பகுதிகளில் ரூ.80ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 35 காசுகள் விலை உயர்ந்து 81 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், மும்பையில் லிட்டருக்கு 34 காசுகள் விலை அதிகரித்து 89 ரூபாய் ஒரு காசுக்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவை பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. இன்னும் சில தினங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை எட்டும் என வாடிக்கையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

இந்நிலையில், பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு மேல் செல்லாது என்று வாடிக்கையாளர் ஒருவர் ஜோக்காக கூறியுள்ளார். அதாவது பெட்ரோல் பங்குகளில் நாம் பெட்ரோல் போடும் போது அங்கு அன்றையை விலை என்ன என்பது ஒரு இண்டிகேட்டரில் தெரியும். நாள்தோறும் விலையேற்றத்திற்கு தகுந்தாற்போது அது மாற்றி அமைக்கப்படும். ஆனால், பெட்ரோல் பங்கில் காட்டும் அந்த இண்டிகேட்டரில் தற்போதையை நிலவரப்படி 99.99 ரூபாய்க்கு மேல் மாற்றி அமைக்க முடியாது. அதாவது அதுவரை தான் விலை ஏற்றதை செட் செய்ய முடியும்.