இந்தியா

ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!

JustinDurai

டெல்லியில் நிலவும் விலை நிலவரத்தின் அடிப்படையில் கணக்கிட்டால், 2021 பிப்ரவரி நிலவரத்தின்படி வரிகள் ஏதும் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.29.34 மட்டும்தான். இங்கிருந்து ஒவ்வொன்றாய் வரி என்ற பெயரில் விலை எப்படியெல்லாம் உயர்கிறது என்று பார்த்தால் ஒரு நிமிடம் நமக்கே தலை சுற்றிவிடும்.

முதலில் கூடுவது Ocean Freight என்பதுதான். அதாவது எண்ணெய்யை நாம் கப்பலில்தானே கொண்டு வர முடியும். எண்ணெய்யை பேக் செய்து கப்பலின் மூலமாக இந்தியா வந்து சேருவதற்கு தான் இந்த விலை. இதனையும் சேர்த்து தான் நாம் கச்சா எண்ணெய் விலையை கணக்கிட வேண்டும். ஒரு பொருளை நாம் வாங்கினால் அது வீடு வந்து சேர்வதற்கு ஆகும் செலவைப் போல்.

இதன் பிறகு நான்கு நிலைகளை கடந்துதான் பெட்ரோல் விலை இதுதான் என்று நிர்ணயிக்கப்படும். 

நிலை 1 : விநியோகஸ்தர்களிடம் வசூலிக்கப்படும் விலை (கலால் வரி, வாட் வரி இல்லாமல்)

நிலை 2 :  கலால் வரி (மத்திய அரசு வரி) கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான செலவு மற்றும் போக்குவரத்து செலவை ஈடு கட்டுவதற்காக கலால் வரி விதிக்கப்படுகிறது. 

நிலை 3 : வாட் வரி - மாநில அரசின் சார்பில் விதிக்கப்படும் வரி. இது மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசப்படும்.

நிலை 4 : டீலர் கமிஷன் - வாங்குவதற்கும் விற்பதற்குமான விலையில் செய்யப்படும் மாற்றம். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 3 ரூபாய்க்கு மேல் டீலர் கமிஷன் இருக்கும் 

பெட்ரோல் அடிப்படை விலை ரூ.29.34
சரக்கு வரி (Freight) ரூ.0.37
விநியோகஸ்தர்களிடம் வசூலிக்கப்படும் விலை (கலால் வரி, வாட் வரி இல்லாமல்) ரூ.29.71
கலால் வரி ரூ.32.98
வாட் வரி  ரூ.19.92
டீலர் கமிஷன் ரூ.3.69
விற்பனைக்கு வரும் போது ரூ.86.30

Source: Petroleum Planning & Analysis Cell