நாடெங்கும் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது
சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 30 காசு அதிகரித்து 102 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டர் 33 காசுகள் உயர்ந்து 98 ரூபாய் 59 காசுக்கு விற்பனையாகிறது. புதுச்சேரியில் பெட்ரோல் விலை 103 ரூபாய் 27 காசாகவும் டீசல் விலை 97 ரூபாய் 83 காசாகவும் உயர்ந்துள்ளது. இதற்கிடையே சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 85 டாலரை தாண்டி விற்பனையாகிறது. இது 3 ஆண்டுகளில் இல்லாத உயர்ந்த அளவாகும். அடுத்து வரும் மாதங்களில் உலக நாடுகளின் தேவைக்கேற்ப கச்சா எண்ணெய் உற்பத்தி இருக்காது என்ற காரணத்தால் அதன் விலை உயர்ந்து வருகிறது.