இந்தியா

விரைவில் ஆன்லைனில் பெட்ரோல்: தர்மேந்திர பிரதான்

விரைவில் ஆன்லைனில் பெட்ரோல்: தர்மேந்திர பிரதான்

webteam

ஆன்லைன் மூலம் பெட்ரோல் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகமாகும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

இதுகுறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் அளித்த பேட்டியில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால் வீடு தேடி பெட்ரோல், டீசல் வழங்கும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. பல கூடுதல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பெட்ரோல், டீசலை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும் என தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.