இந்தியா

பேரறிவாளன் விவகாரம்: மே 10-க்குள் மத்திய அரசு முடிவெடுக்க அவகாசம் வழங்கிய உச்சநீதிமன்றம்

Rasus

பேரறிவாளன் விவகாரத்தில், மத்திய அரசு செவ்வாய்கிழமைக்குள் முடிவெடுக்காவிட்டால் அரசமைப்பின்படி உச்சநீதிமன்றம் முடிவு எடுக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், “மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை உடனே விடுவித்து உத்தரவிடுகிறோம்.

அரசமைப்பு சட்டம், கூட்டாட்சி தத்துவம் தொடர்புடைய அதிமுக்கிய விஷயமாக இந்த வழக்கை கருதுகிறோம். பேரறிவாளன் விவகாரத்தில் பல இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம். அதன் நிலை என்ன? ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்படவேண்டியதுதானே” என பல விஷயங்களை குறிப்பிட்டனர்.

அத்துடன் பேறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு செவ்வாய்கிழமைக்குள் (மே 10) முடிவெடுக்காவிட்டால் அரசமைப்பின்படி உச்சநீதிமன்றம் முடிவு எடுக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.