கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்குவதற்காக சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மருந்துக் கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் விடிய விடிய காத்துக் கிடக்கின்றனர்.
ரெம்டெசிவிர் மருந்துகள் தட்டுப்பாடு நிலவுவதால், அதனை பயன்படுத்தி சிலர் ரூ.8000 வரை இந்த மருந்தை விற்பனை செய்து வருகின்றனர். மேலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை வெளியே சென்று வாங்கி வருமாறு நோயாளிகளின் உறவினர்களை வற்புறுத்துகின்றனர்.
இதனால், மருந்துக் கடைகளில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்காக, இரண்டு நாட்களுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். அவ்வாறு காத்திருந்து வாங்கும் போதும், ஒருவருக்கு ஒரு ஊசி மட்டுமே வழங்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.