இந்தியா

சொந்த தகவல் மீது நுகர்வோருக்கே உரிமை - டிராய்

சொந்த தகவல் மீது நுகர்வோருக்கே உரிமை - டிராய்

webteam

நுகர்வோரின் சொந்த தகவல்களுக்கு நிறுவனங்கள் உரிமை கொண்டாட முடியாது என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது. 

தொலைத்தொடர்பு துறையில் ஏற்கெனவே உள்ள தனி நபர் தகவல் பாதுகாப்பு விதிகள் போதுமானதாக இல்லை என்று கூறியுள்ள டிராய், தனி நபரின் விவரங்களை பெறும் நிறுவனங்களுக்கு அதில் உரிமை இல்லை என்றும், நுகர்வோரின் ஒப்புதலுடன் மட்டுமே தகவல்களை பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் நுகர்வோரின் ஒப்புதலுடன் தகவல்கள் பெறப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும் என தொலைத்தொடர்பு துறைக்கு டிராய் பரிந்துரை செய்துள்ளது.

நுகர்வோரின் தகவல்களுக்கு நிறுவனங்கள் வெறும் பொறுப்பாளர்கள் மட்டுமே என்றும், அவர்களுக்கு அதில் அடிப்படை உரிமை கூட கிடையாது என தெரிவித்துள்ளது. பொதுத்தகவல் பாதுகாப்பு சட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்படும் வரை, ஏற்கனவே உள்ள விதிகள், அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.