இந்தியா

நாகா இன மக்களுக்கு கர்நாடகாவில் நிகழும் அவலம் !

நாகா இன மக்களுக்கு கர்நாடகாவில் நிகழும் அவலம் !

jagadeesh

கர்நாடகாவின் மைசூரூவில் வடகிழக்கு இந்தியாவிலிருந்து குடியேறிய நாகா இன மக்களுக்கு பல்பொருள் அங்காடி ஒன்று உணவுப் பொருட்களை வழங்க மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் மற்றும் உணவகங்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குபோது சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடாக மாநிலம் மைசூருவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில், வடகிழக்கு இந்தியாவில் இருந்து குடியேறிய நாகா இன மக்கள் உணவுப்பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படவில்லை. பல்பொருள் அங்காடி ஊழியர்கள் நாகா இனத்தை சேர்ந்த நபர் ஒருவரை கடையிலிருந்து வெளியேறக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது.

வடகிழக்கில் குடியிருப்போர் உருவத்தில் சீனர்களை ஒத்திருப்பதால் அவர்களுக்கு உணவுப்பொருள் மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.