டையூ - டாமனில் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த குழந்தையை கீழே நின்றிருந்தவர்கள் பத்திரமாக பிடித்து காப்பாற்றினர்.
சிசிடிவி வந்த பிற்பாடு மனிதர்கள் எந்தளவுக்கு கவனக்குறைவாக இருக்கிறார்கள்? எப்படி எல்லாம் தவறுகள் நடக்கின்றன? என்பது குறித்த பல விவரங்கள் காட்சி ரீதியாக நமக்கு எளிமையாக காணக் கிடைக்கின்றன. ஒவ்வொரு நாளும் வெளியாகும் விநோத வீடியோக்கள் பல கோணங்களில் நம்மை விழிப்புணர்வு அடையச் செய்து வருகின்றன. அந்த வரிசையில் இப்போது ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
டையூ - டாமனில் உள்ள ஒரு குடியிருப்பின் மூன்றாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை திடீரென தடுமாறுவதை, கீழே நின்றிருந்தவர்கள் கவனித்தனர். துரிதமாக செயல்பட்ட அவர்கள், குழந்தை கீழே விழக்கூடும் இடத்தை துல்லியமாகக் கணித்து, அங்கு தயாராக நின்றனர். அப்போது அங்கு தவறி விழுந்த குழந்தையை அவர்கள் கச்சிதமாக பிடித்து காப்பற்றினர். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியிருந்தன.