பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், தேசப்பக்திக்கான இலக்கணமே மாறிவிட்டதாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சோனியா காந்தி, எதிர்க்கருத்துடையவர்களை தற்போதைய அரசு மதிப்பதே இல்லை என்றும், நாட்டின் ஆன்மா திட்டமிட்டவகையில் நசுக்கப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
நாட்டில் சட்டத்தின் படி ஆட்சி நடத்தாமல் சுய விருப்பப்படி பாரதிய ஜனதா செயல்பட்டு வருவதாகவும் சோனியா காந்தி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், தேசப்பக்திக்கான இலக்கணமே மாறிவிட்டதாக தெரிவித்த சோனியா காந்தி, பன்முகதன்மையை ஏற்காதவர்களே தேசபக்தர்கள் என அழைக்கப்படுவதாகவும் கூறினார்.
ஆட்சிக்கு வந்தால், காங்கிரஸ் கட்சி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் எனவும் வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க ஒரு அமைப்பு உருவாக்கப்படும் என்றும் சோனியா காந்தி தெரிவித்தார்