இந்தியா

எங்கே தனிமனித இடைவெளி?: மக்கள் நெரிசலில் மூச்சடைத்த மார்க்கெட்!

webteam

கொரோனா பரவத் தொடங்கியதுமே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனாவக் கட்டுப்படுத்த முதல்கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் மே3ம் தேதி வரை 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நேற்று நீட்டிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பின் அளவை பொருத்து சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் அதிகம் பாதித்த பகுதிகளில்அத்தியாவசியத் தேவைக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனை மீறி தேவையில்லாமல் நடமாடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அத்தியாவசியத் தேவைக்காக வெளியில் வருபவர்களும் முகக்கவசம் அணியவேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடி நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. டெல்லி காஷிபூரில் உள்ள காய்கறி, பழ சந்தையில் பொதுமக்கள் கூட்டமாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். தனிமனித இடைவெளி தேவை என அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் மிகவும் நெருக்கமாக கூட்டமாக மக்கள் கூடி நின்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது