நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் அவரது காதலியான ரியா சக்ரபோர்த்தி மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அவரது மும்பை பாந்த்ரா வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். பட வாய்ப்புகள் அவருக்கு மறுக்கப்பட்டதாக ஒருபுறமும் அவரது காதலி ரியா சக்ரவர்த்தி பிரிவினாலும்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்கின்ற பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், அவரது காதலி ரியா சக்ரவர்த்தி பாலிவுட்டின் பிரபல இயக்குநரும் தயாரிப்பாளரும் நடிகை ஆலியா பாட்டின் தந்தையுமான 71 வயதாகும் மகேஷ் பாட்டுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பி வந்தன. அவரால்தான், சுஷாந்தின் காதலில் ரியா சக்ரவர்த்தி பிரிந்துசென்றார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரியா மீது சுஷாந்தின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத்திடம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக பாட்னாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் ரியா சக்கரபோர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.