பீஹார் மாநிலம் பாட்னாவில் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் வழங்கப்பட்ட பணியாளர் நியமனத்துக்கான உறுதிமொழி விண்ணப்பத்தில் இடம் பெற்ற கேள்வியில் திருமணம் ஆனவர், ஆகாதவர் என்ற கேள்விகளுடன் கற்புள்ளவரா என்ற கேள்விகளும் இருந்தது.
சமூக வளைதளங்களில் இந்த விண்ணப்பம் விவாதப்பொருளாக மாறியது. இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த மருத்துவக் கல்லூரி ஆய்வாளர் மணீஷ் மண்டல், கற்பு குறித்த கேள்வி தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அது திருமணம் ஆகாதவரைக் குறிக்கும் சொல் எனவும் தெரிவித்துள்ளார்.