ஏர் இந்தியா முகநூல்
இந்தியா

5 மணி நேரம் வியர்வையில் நனைந்த பயணிகள்.. ஏர் இந்தியா விமானம் மீது புகார்.. அடுத்தடுத்து சர்ச்சைகள்!

அகமதாபாத் விமான விபத்து சம்பவமே இன்னும் மக்களைவிட்டு விலகாத நிலையில், ஒருசில விமானங்களில் நேற்றும் இன்றும் அசெளர்கயம் ஏற்பட்டது.

Prakash J

குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். மேலும், இக்கட்டடத்தில் இருந்தவர்களும் உயிர் பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 274 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகமதாபாத் விமான விபத்து சம்பவமே இன்னும் மக்களைவிட்டு விலகாத நிலையில், ஒருசில விமானங்களில் நேற்றும் இன்றும் அசெளர்கயம் ஏற்பட்டது. இதையடுத்து பயணிகள் ஒருவித அச்சத்திற்கு ஆளாகினர். இதுதொடர்பான விவரங்களைப் பார்க்கலாம்.

உத்தரப்பிரதேசம்:

ஹஜ் பயணிகளுடன் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து லக்னோ விமான நிலையத்திற்கு வந்த விமானம், தரையிறங்கியபோது இடதுபுற சக்கரத்தில் புகை வந்ததால் அதிர்ச்சி; Landing Gear-ன் ஹைட்ராலிக் ஆயில் கசிந்ததால் புகை என தகவல். பழுது சரிசெய்யப்பட்டு, சௌதியா ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் ஜெடாவிற்கு புறப்பட்டது.

லண்டன்:

லண்டனில் இருந்து சென்னை புறப்பட்ட British Airways-ன் BOEING 787 விமானம், லண்டனில் அவசர அவசரமாக தரையிறக்கம்; விமானத்தில் Flap Adjustment Failure ஏற்பட்டதால், நடுவானில் எரிபொருளை வெளியேற்றிவிட்டு விமானம் தரையிறக்கப்பட்டது

இந்தியா:

ஜெய்ப்பூர் - துபாய் ஏர் இந்தியா விமானத்தில் ஏ.சி. செயலிழப்பால் பயணிகள் அவதி; 5 மணி நேரத்துக்கும் மேலாக பயணிகள் வியர்வையில் நனைந்திருக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சி

ஹாங்காங்:

ஹாங்காங்கில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் கோளாறு ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் ஹாங்காங் திரும்பியது விமானம். பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்ட நிலையில், அதிகாரிகள் விமானத்தில் ஆய்வு