இந்தியா

சட்டப்பேரவைத் தேர்தல்: நாகாலாந்து புறப்படும் அமித்ஷா

webteam

வரும் 27ஆம் தேதி நாகாலாந்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் இன்று மாநிலத்தில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார்

மொத்தம் உள்ள அறுபது சட்டமன்ற தொகுதிகளை கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவைக்கு தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது வாக்கு எண்ணிக்கையானது என்பது மார்ச் இரண்டாம் தேதி நடைபெறுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் பெரும் கவனம் செலுத்தி வரும் பாரதிய ஜனதா கட்சி நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில் தனி கவனம் செலுத்தி வருகிறது இரண்டு நாள் பயணமாக தேர்தல் பரப்புரைக்காக அம் மாநிலம் செல்லும் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றார்.


மோன் டவுன் என்ற தொகுதியில் சினூங் கொண்யாக் அவர்களை ஆதரித்து இன்று மாலை மூன்று முப்பது மணி அளவில் தேர்தல் பேரணியில் அவர் கலந்து கொள்கின்றார். இப்பேரணியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதே சமயம் இந்த  தொகுதியில் தான் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 பொதுமக்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு என்ற தனி அமைப்பினர் தனி மாநிலம் கோரி நீண்ட நாட்களாக போராடி வரக்கூடிய சூழலில் அவர்களையும் அமித் ஷா சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.