இந்தியா

நவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ?

நவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ?

webteam

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்தமாதம் 18ஆம் தேதி தொடங்கும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தத் தொடரை டிசம்பர் 24ஆம் தேதி வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் மத்திய அமைச்சர் ‌ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. 

மோடி அரசு 2-வது முறையாக பதவியேற்றப் பிறகு நடைபெற்ற முதல் கூட்டத் தொடரின் போது, 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதேபோன்று குளிர்கால கூட்டத்தொடரிலும் பல மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளாக கூறப்‌படுகிறது.