இந்தியா

ஜன. 31-ல் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் - பிப். 1-ல் மத்திய பட்ஜெட்

ஜன. 31-ல் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் - பிப். 1-ல் மத்திய பட்ஜெட்

webteam

நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டத்தொடர் ஜனவரி 31ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கான கூட்டத்தொடர் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கவுள்ளது. அன்று காலை 11 மணியளவில் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார்.

இதைத்தொடர்ந்து, பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பின்னர் அரசின் செயல்பாடுகள் மற்றும் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெறும். இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் தங்கள் துறைகளுக்கான அறிக்கைகளை தயார் செய்தவற்காக பிப்ரவரி 11ஆம் தேதி முதல் மார்ச் 2ஆம் தேதி வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்படும். அதன்பின்னர் மீண்டும் தொடங்கும் கூட்டத்தொடர் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.