இந்தியா

கெஜ்ரிவால்-துணைநிலை ஆளுநரின் கருத்து மோதல் தீவிரம்

கெஜ்ரிவால்-துணைநிலை ஆளுநரின் கருத்து மோதல் தீவிரம்

webteam

டெல்லியில் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் மற்றும் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் இடையேயான கருத்துப் போர் முற்றி வருகிறது. 

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நீல நிற மாருதி வேகன்-ஆர் காரில் பயணம் செய்வது வழக்கம். கடந்த 12-ஆம் தேதி, டெல்லி தலைமைச் செயலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த அவரின் காரை, மர்ம நபர்கள் யாரோ திருடிச் சென்றனர். முதலமைச்சர் காரே திருடு போனதால் காவல்துறையினர் தீவிரமாக, கொள்ளையர்களை தேடிவந்தனர். இதையடுத்து உத்தரப்பிரதேச மாநிலம் காசியபாத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் கண்டெடுக்கப்பட்டது. தனது கார் திருடப்பட்டதையடுத்து, டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். 

இந்நிலையில் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்துள்ள டெல்லி துணைநிலை ஆளுநர், வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலையில் கார் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறியுள்ளார். அத்துடன் காரில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். துணைநிலை ஆளுநரின் இந்த பதிலால், கெஜ்ரிவாலுடனான கருத்து மோதல் முற்றியுள்ளது.