அசாம் மருத்துவமனையில் 3 வருடத்திற்கு முன்பு பிறந்த, தங்களின் உண்மையான குழந்தையை பெற்றோர்கள் கண்டுப்பிடித்துள்ள சம்பவம்
பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 2015ஆம் ஆண்டு அசாமில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட முஸ்லீம் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை
பிறந்தது. இதில் தனக்கு பிறந்த ஆண் குழந்தையின் முகத்தோற்றம் தனது குடும்பத்தில் உள்ள உறவினர்கள் சாயலில் இல்லை என்று ஆசிரியராக
பணிபுரியும் முஸ்லீம் பெண்மணிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த ஆண் குழந்தை பார்ப்பதற்கு போடோ இன மக்களை போல
காட்சியளிப்பதாகவும் அவர் சந்தேகித்துள்ளார். இதுக்குறித்து பலமுறை தனது கணவரின் கவனத்திற்கு கொண்டும் சென்றும் அவர், இதை
மதிக்காததால் அந்த ஆசிரியை தன்னிச்சையாக பல முயற்சிகளை எடுத்துள்ளார். இதன்படி தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவமனைக்கு சென்று,
அதேநாளில் மருத்துவமனையில் பிறந்த அனைத்து குழந்தைகளின் தகவல்களையும் சேகரித்துள்ளார்.
இறுதியாக, அந்த ஆசிரியை டிஎன்ஏ பரிசோதனை மூலம், அந்த ஆண் குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்றும் நிரூபித்துள்ளார். அதன் பின்பு, அந்த
தம்பதியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசாரின் விசாரணைக்கு பின்னர், முஸ்லீம் ஆசிரியருக்கு குழந்தை பிறந்த அதேநாளில்
போடோ இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் அதே மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பின்னர், இந்த
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரண்டு குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
பரிசோதனையின் முடிவுக்கு பின்னர், இரண்டு குழந்தைகளும் பெற்றோர்களிடம் மாறி வளர்ந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. பின்னர், குழந்தைகளை
அவர்களின் உரிய பெற்றோரிடம் ஒப்படைக்கும் படி காவல் துறையினருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களின் செல்ல மறுத்தனர். 3 வயதாகும் அந்த குழந்தைகள் தங்களின்
உண்மையான பெற்றோரிடம் செல்ல மறுத்து கதறி அழுத நிகழ்வு பார்ப்பவரின் கண்களை கலங்க வைத்தது. இந்த சோகத்தை தாங்கிக் கொள்ள
முடியாத பெற்றோர்கள் குழந்தைகளை மாற்றிக் கொள்வதற்கு விருப்பம் இல்லை என்று மறுத்து விட்டனர். மருத்துவமனையின் அலட்சியத்தால்
இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனையை அளிக்கிறது என்றும் அவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.