இந்தியா

முதல் பரம்வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் சோம்நாத் நினைவு தினம் அனுசரிப்பு

webteam

ராணுவ வீரர் சோம்நாத் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. யார் இவர்? அவரது தியாகம் என்ன?

நாட்டிலேயே முதல் பரம்வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் சோம்நாத் சர்மாவின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1947-ஆம் ஆண்டு ஸ்ரீநகர் விமானநிலையத்தை பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்க பட்கம் என்ற பகுதியில் பதுங்கியிருந்தனர். அப்போது மேஜர் சோம்நாத் சர்மாவின் தலைமையிலான கம்பெனி, பட்கம் அனுப்பி வைக்கப்பட்டது.

பல மணி நேரப் போராட்டத்தில், எதிரிகள் அழிக்கப்பட்ட பின் சோம்நாத் சர்மா வீர மரணமடைந்தார். அவரது நினைவு தினம், பட்கம் போராட்ட தினம் எனக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி ஸ்ரீநகரில் உள்ள சோம்நாத் சர்மாவின் நினைவிடத்தில் ராணுவப்படையினர் மரியாதை செலுத்தினர்.