இந்தியா

புதுச்சேரி: கடல் சீற்றத்தால் 'பாரடைஸ் பீச்' கடும் சேதம்

புதுச்சேரி: கடல் சீற்றத்தால் 'பாரடைஸ் பீச்' கடும் சேதம்

கலிலுல்லா

புதுச்சேரியன் பிரபல சுற்றுலா மையமான பாரடைஸ் பீச், கடல் சீற்றம் காரணமாக கடுமையாக சேதம் அடைந்துள்ளது.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் புதுச்சேரியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இதன்படி, புதுச்சேரி கடற்பகுதி கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், நோணாங்குப்பத்தில் உள்ள பாரடைஸ் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் பலத்த சேதம் அடைந்தன.

கடல் சீற்றம் மற்றும் கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டது. விடுமுறையன்று பாரடைஸ் கடற்கரைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனிடையே பாரடைஸ் கடற்கரையில் ஏற்பட்ட சேதத்தால், புதுச்சேரி சுற்றுலாத்துறைக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.