இந்தியா

அடுத்தவர் மனைவி மீது காதல்... 71 ஆடுகளை நஷ்ட ஈடு கொடுத்த காதலன்...

webteam

காதலனுடன் வாழ்வ‌தற்காக கணவருக்கு 71 ஆடுகளை இழப்பீடாக மனைவி விட்டுக்கொடுத்துள்ள சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

கோரக்பூரைச் சேர்ந்த சீமா என்பவர் தனது கணவர் ராஜேஷுடன் வாழ விருப்பமின்றி அதே ஊரைச் சேர்ந்த உமேஷ் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். இதனால் பாதிக்கப்பட்ட ராஜேஷூக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அவரது தந்தை கிராம பஞ்சாயத்தில் ‌முறையிட்டார். ‌பஞ்சாயத்தார், சீமா மற்றும் அவரது காதலர் உமேஷ் ஆகியோரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது சீமா, தனது காதலருடனேயே வாழ விரும்புவதாகத் தெரிவித்தார். இதற்கு இழப்பீடாக உமேஷ் வளர்த்துவரும் 142 ஆடுகளில் பாதியை, அதாவது 71 ஆடுகளை சீமாவின் கணவர் ராஜேஷுக்கு கொடுக்க வேண்டும் என பஞ்சாயத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்ப‌‌டி சீமா, ராஜேஷ், உமேஷ் ஆகிய மூன்று பேர் இடையே ஒப்பந்தம் கையெத்தானது. காதலன் உமேஷ் தனது காதலி சீமாவின் கணவர் ராஜேஷூ‌க்கு 71 ஆடுகளை பஞ்சாயத்து தலைவர் முன்னிலையில் வழங்கினார்.