ட்ரோன் மூலம் வீடுகளுக்கு பான் மசாலா விநியோகம் செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியத் தேவைகளான காய்கறி, மளிகை, மருந்து, பால் ஆகியவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள், டாஸ்மாக் போன்றவைகள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் மதுபானங்களுக்காக பல்வேறு குற்றசம்பவங்கள் நடைபெறுகின்றன.
பால் கேனில் மதுபானம் கடத்தப்படுவது, டாஸ்மாக்கை உடைத்து கொள்ளை என சம்பவங்கள் அரங்கேறும் நிலையில் தற்போது பான்
மசாலாவுக்காக ட்ரோன்கள் பறக்கத் தொடங்கியுள்ளன. குஜராத்தின் மோர்பி பகுதியில் ட்ரோன் மூலம் பான் மசாலா வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான டிக் டாக் வீடியோவும் வைரலானது. வீடியோவை வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்