ஆதாருடன் பான் எனப்படும் வருமான வரிக் கணக்கு எண்ணை இணைப்பதற்கான அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை பெறுவதற்கும் வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு, செல்போன் இணைப்பு உள்ளிடவற் றுக்கும் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி பான் கார்டுடன் ஆதாரை இணைக்கும் திட்டம், பல மாதங்களாக நடைபெற்று வருகிறது.
நான்கு முறை இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இப்போது ஐந்தாவது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை இணைத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 33 கோடி பேருக்கு மேல் பான் எண் வைத்திருக்கும் நிலையில் கடந்த மார்ச் வரை சுமார் 16 கோடியே 65 லட்சம் பேர் மட்டுமே ஆதாருடன் பான் எண்ணை இணைத்துள்ளனர்.