பாகிஸ்தானை சேர்ந்த 14 மாத வயது ஆண் குழந்தைக்கு டெல்லி தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த 14 மாத வயது ஆண் குழந்தை சில நாட்களாக மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு வந்ததுள்ளது. மேலும் உணவும் அதிகம் சாப்பிடாமல் தவிர்த்து வந்துள்ளது.
இதையறிந்த அந்தக் குழந்தையின் பெற்றோர் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் இருதயம் பெரிதாக இருப்பதை கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். இதையடுத்து அந்தக் குழந்தைக்கு டெல்லி தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “குழந்தையின் இடது ஆரிக்கிள் பெரிதாக இருந்தது. இடது வால்வுகள் 87 மில்லி ரத்தும் செல்லும் வகையில் வளர்ச்சியடைந்திருந்தது. 14 மாத வயது குழந்தையின் எடை 10.1 கிலோ இருக்கவேண்டும். ஆனால் இந்தக் குழந்தையின் எடை 6.5 கிலோ தான் இருந்தது. பரிசோதனை செய்ததில் மூன்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாக இருந்தது. அதாவது, குழந்தையின் இதயத்தில் பெரியா ஓட்டை ஒன்று இருந்தது. இடது வால்வுகளில் ரத்த கசிவு ஏற்பட்டிருந்தது. இடது ஆரிக்கிள் பெரிதாக வளர்ச்சி அடைந்திருந்தது. தற்போது ஓட்டையை அடைத்துள்ளோம். வால்வும் சரிசெய்துள்ளோம். இடது ஆரிக்கிளின் அளவை குறைத்துள்ளோம்.” என தெரிவித்தனர்.