இந்தியா

1949 ஜெனிவா ஒப்பந்தம் சொல்வதென்ன ?

webteam

ஜெனிவா ஒப்பந்தத்தை மீறி காயமடைந்த நிலையில் இருக்கும் இந்திய விமானியின் வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

ஜெனிவா ஒப்பந்தம் சொல்வது என்ன என்று பார்க்கலாம். இரண்டாம் உலகப்போரின் கோரத்தைத் தொடர்ந்து 1949 ஆம் ஆண்டு உலகத் தலைவர்களிடையே ஜெனிவா ஒப்பந்தம் போடப்பட்டது. அதில், சிறைபிடிக்கப்படும் பிறநாட்டு வீரர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்புகளை வெட்டி அகற்றுதல் உள்ளிட்ட கொடுமைகளை செய்யக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காயப்படுத்தக்கூடாது, தன்மானத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன், முறைப்படி நிறுவப்படாத நீதிமன்றங்கள் மூலம் மரண தண்டனை நிறைவேற்றக் கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட வீரரின் அடையாளத்தை உறுதிப்படுத்தி, அவரது சொந்த நாட்டுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காயமடைந்த வீரர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளிக்க வேண்டும், 7 நாட்களுக்குள் சொந்த நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டவையும் ஜெனிவா ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறிவிட்டதாக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.