குஜராத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்திய திரும்பிய இஸ்லாமியப் பெண் ஒருவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஹசீனா பென் என்பவர் கடந்த 1999ஆம் ஆண்டு திருமணத்துக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு குடியேறினார். இந்த நிலையில் கணவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஹசீனா பென் இந்தியாவுக்கு திரும்பினார். குஜராத்தின் துவாரகாவில் வசித்து வரும் அவர் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில் ஹசீனா பென்னுக்கு இந்தியக் குடியுரிமைக்கான சான்றிதழை துவாரகா ஆட்சியர் டாக்டர் நரேந்திர குமார் வழங்கினார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு இந்தியக் குடியுரிமையை குஜராத் அரசு வழங்கியுள்ளது.