காஷ்மீர் எல்லையில் இந்திய விமானப்படைத்தளப் பகுதிக்குள் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜம்முகாஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தானின் ஹெலிகாப்டர் நண்பகலில் பறந்துள்ளது. அத்துமீறி நுழைந்த அந்த ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள் சுட முயற்சித்துள்ளனர். ஆயினும் ஹெலிகாப்டர் என்ன ஆனது என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.
இதேபோல், கடந்த பிப்ரவரி மாதமும் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அத்துமீறி நுழைந்தது. எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதம் அதிகரித்துள்ள நிலையில் இதுபோன்ற செயல்பாடுகள் இந்தியாவிற்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.