பாகிஸ்தானில் உள்ள இந்திய துணை தூதருக்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அத்துமீறி இந்தியா துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அந்நாட்டில் உள்ள இந்திய துணை தூதர் ஜே.பி.சிங்கிற்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 அப்பாவிகள் உயிரிழந்ததாகவும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்திய துணைத் தூதரிடம் தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து இந்திய தூதர் கூறும்போது, அப்பாவி பொதுமக்கள் வேண்டமென்றே கொல்லப்பட்டிருந்தால் அது கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.