இசைஞானி இளையராஜா உட்பட பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு குடியரசுத் தலைவர் வழங்கி கவுரவித்தார். தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமிக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த யோகா கலைஞர் நானம்மாள், ராஜகோபாலன் ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.