இந்தியா

உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை 

உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை 

webteam

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் தொடர்ந்த வழக்கின் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரை இன்று வரை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் சிபிஐயின் அலுவலகத்தில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 

இந்நிலையில் இன்று காவல் முடிந்து மீண்டும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படவுள்ளார். அத்துடன் அவர் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் தன்னை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அளிக்கப்பட்ட அனுமதியை எதிர்த்தும் சிதம்பரம் புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
 


ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பாக அமலாக்கத்துறையின் வழக்கில் முன் ஜாமீன் கோரி சிதம்பரம் தொடர்ந்த வழக்கும் இன்று விசாரிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் மூன்று வழக்குகளையும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தது.