இந்தியா

சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம் பெயர்

சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம் பெயர்

webteam

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கின் சிபிஐ குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம் பெயர் இடம்பெற்றுள்ளது.
 
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிபிஐ இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் முன்னாள் மத்திய நிதி அமைசச்ர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 18 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல்லில் ரூ.3,500 கோடி முதலீடு செய்திருந்தது. இதில் முறைகேடு நடந்ததாகவும், கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனம் அதற்கு உடந்தை எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அத்துடன் சிபிஐ-யும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் சிபிஐ தங்கள் தரப்பில் இருந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் ப.சிதம்பரம் உள்ளிட்ட 18 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், தனது நற்பெயரை கெடுக்கவே இந்தக் குற்றச்சாட்டை சிபிஐ வைத்துள்ளதகாவும், சிபிஐக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.