சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை வரும் 26-ஆம் தேதி காவலில் விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை தனது மற்ற வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து கொண்டுவர சிதம்பரம் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.