இந்தியா

“யாரையோ திருப்திப்படுத்தவே இந்தக் கைது நடவடிக்கை” - கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

“யாரையோ திருப்திப்படுத்தவே இந்தக் கைது நடவடிக்கை” - கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

webteam

சிபிஐ நடவடிக்கை உண்மையானது அல்ல என்றும், யாரையோ திருப்திப்படுத்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழக எம்.பி-யும், ப.சிதம்பரம் மகனுமான கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “ இந்த அரசாங்கம் முழுக்க முழுக்க காழ்ப்புணர்ச்சி காரணத்தால் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமால் ஜோடிச்ச வழக்கை உருவாக்கி, அந்தச் சம்பவங்கள் எல்லாம் 2008ஆம் ஆண்டு நடந்ததாக கூறுகிறார்கள். அதற்காக 2017ஆம் ஆண்டு, அதாவது 9 ஆண்டுகளுக்குப் பிறகு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்கிறார்கள். அதன்பின்னர் 4 முறை சோதனை நடத்திவிட்டார்கள். இருபது முறை எனக்கு சம்மன் அனுப்பிவிட்டார்கள். 

ஒவ்வொரு சம்மனுக்கும் நான் 10 மணி நேரம் அவர்களுக்கு முன் ஆஜராகினேன். சிபிஐ-யின் விருந்தாடியாக 11 நாட்கள் இருந்திருக்கிறேன். ஆனால் இதுவரையிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே இது ஒரு உண்மையான நடவடிக்கையாக தெரியவில்லை. இது யாரையோ திருப்திப்படுத்துவதற்காக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. என் தந்தை எங்கும் ஓடி ஒளியவில்லை” என்று தெரிவித்தார்.