இந்தியா

”குஜராத் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு நீங்கள் என்ன பாடம் கற்பித்தீர்கள்?” - ஓவைசி கேள்வி

Abinaya

குஜராத் கலவரத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு நீங்கள் என்ன பாடம் கற்பித்தீர்கள்? என அகில இந்திய மஜ்லிஸ் - இ - இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கேட்டுள்ளார்.

குஜராத்தின் ஜுஹாபுரா பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, எஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, கேள்விகளை எழுப்பியுள்ளார். அப்போது கூட்டத்தில் ஒவைசி ஆற்றிய உரையாற்றின் போது, “பில்கிஸ் பானோவை பலாத்காரம் செய்தவர்கள் உங்களால் விடுவிக்கப்படுவார்கள், பில்கிஸின் 3 வயது மகள் அஹ்சானின் கொலைகாரர்களை விடுவிப்பீர்கள் என்பதுதான் 2002ல் குஜராத் கலவரத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுத்த பாடம். மேலும் எஹ்சான் ஜாஃப்ரி கொல்லப்படுவார்..இப்படியாக உங்களுடைய எந்தப் பாடங்களை நாங்கள் நினைவில் வைத்திருப்போம்?" என்றார்.

முன்னதாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கெடா மாவட்டத்தின் மஹுதா நகரில் நடைபெற்ற பேரணியில் பேசிய அமித் ஷா, “குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது (1995க்கு முன்) வகுப்புவாதக் கலவரங்கள் தலைவிரித்தாடின. காங்கிரஸ் பல்வேறு மக்களைத் தூண்டி வந்தது. இதுபோன்ற கலவரங்கள் மூலம் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொண்டு சமுதாயத்தின் பெரும் பகுதியினருக்கு அநீதி இழைத்தது.

குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்ததுனால அவர்கள் 2002 முதல் 2022 வரை வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்த்தனர். மீண்டும் அவர்கள் தலைதூக்கவில்லை. குஜராத்தில் பாஜக கடுமையாக நடவடிக்கை எடுத்தது நிரந்தர அமைதியை நிலைநாட்டினோம்’’ என்றியிருந்தார். 

தேர்தல் எப்போது?

182 சட்டசபையை கொண்ட குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதையொட்டி, வரும் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறுகிறது.