நடப்பு ஆண்டின் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 66 லட்சம் பேர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தியப் பொருளாதாரச் சூழலை ஆய்வு செய்யும் CMIE என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், சென்ற மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பொறியாளர்கள், மென்பொறியாளர்கள், ஆசிரியர்கள், உடற்பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலர் தங்கள் பணியில் பெற்ற பணப்பலன்களை இழந்து 4 ஆண்டுகளுக்கு முன் சென்றுள்ளதாகவும் CMIE தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டின் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஒரு கோடியே 88 லட்சம் பேர் நிறுவனங்களில் பணிபுரிந்துள்ள நிலையில், நடப்பாண்டில் அது ஒரு கோடியே 22 லட்சமாக குறைந்துள்ளதாக CMIE அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.