ரயில்வேயில் 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இதைத் தெரிவித்த ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், அதிகபட்சமாக வடக்கு ரயில்வே மண்டலத்தில் 27 ஆயிரத்து 537 காலிப் பணியிடங்கள் உள்ளதாகக் கூறியுள்ளார். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஒதுக்கீட்டிலான பணியிடங்கள் 40 ஆயிரத்துக்கு மேலாக காலியாக இருப்பதாகவும் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ரயில்வேக்கு ஆள்தேர்வு தொடர்ந்து நடைபெறுவதாகவும், புதியவர்கள் சேர்க்கைக்கு இணையான ஓய்வுபெறுவோர் எண்ணிக்கை இருப்பதே காலிப் பணியிடங்கள் குறையாமல் இருக்கக் காரணம் என்றும் பியுஷ் கோயல் கூறியுள்ளார்.