புதுச்சேரியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஜிப்மர் மருத்துவமனையில் வரும் 15 ஆம் தேதி முதல், வெளி நோயாளிகள் பிரிவு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழலில் ஜிப்மர் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 2 ஆயிரத்து 218 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் நோய்த்தொற்று அதிகரிப்பதால் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் பொதுப்பிரிவு சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு கொரோனா சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் வரும் 15 ந்தேதி முதல் முற்றிலுமாக வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிற நோய் பாதிப்பு சிகிச்சை முறைகள் குறித்து தொலைபேசி மூலம் ஜிப்மர் மருத்துவமனையை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.