இந்தியா

உமா பாரதி இடம் இருந்த துறை பறிப்பு - பதவியேற்பு விழாவை புறக்கணித்தார்

உமா பாரதி இடம் இருந்த துறை பறிப்பு - பதவியேற்பு விழாவை புறக்கணித்தார்

rajakannan

மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் உமா பாரதி இடம் இருந்த நீர் வளம் மற்றும் கங்கை நதி தூய்மையாக்கல் துறை பறிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் உமா பாரதி இடம் இருந்த நீர் வளம் மற்றும் கங்கை நதி தூய்மையாக்கல் துறை பறிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு கூடுதலாக நீர்வளத்துறை மற்றும் பிரதமரின் கனவு திட்டமான கங்கை நதி தூய்மை பிரிவும் வழங்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறையை கவனித்து வந்த உமா பாரதிக்கு குடிநீர் மற்றும் துப்பரவு துறை வழங்கப்பட்டுள்ளது. உமா பாரதி இன்றைய பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை.

அருண் ஜேட்லி நிதி அமைச்சர் பொறுப்புடன் கூடுதலாக பாதுகாப்பு துறையை கவனித்து வந்தார். தற்போது நிதித்துறை மட்டும் அவர் வசம் உள்ளது. ரயில்வே துறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபுக்கு நிர்மலா சீதாராமன் வகித்து வந்த வர்த்தக்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தர்மேந்திர பிரதான் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை உடன் கூடுதலாக ராஜீவ் பிரதாப் ரூடி வகித்து வந்த திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் கோயல் வசம் இருந்த விளையாட்டுத் துறை ராஜ்வர்தன் சிங் ரத்தோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கு வசதியாக அமைச்சர்களான ராஜீவ் பிரதாப் ரூடி (திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் - தனி பொறுப்பு), சஞ்சீவ் குமார் பல்யான் (நீர்வளத்துறை), பக்கன் சிங் குலாஸ்டே (சுகாதாரம், குடும்ப நலம்), மகேந்திரநாத் பாண்டே (மனிதவள மேம்பாடு) ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.