இந்தியா

ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் எவரெஸ்ட் ஏறிய ராணுவக்குழு

ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் எவரெஸ்ட் ஏறிய ராணுவக்குழு

webteam

உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் ஏறி இந்திய ராணுவ வீரர்கள் நால்வர் சாதனை படைத்துள்ளனர். 
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 7 பேர் கொண்ட ராணுவ வீரர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த கன்சோக் டென்டா, கெல்ஷெங் டோர்ஜி பூட்டியா, கால்டன் பஞ்சூர் மற்றும் சோனம் பண்ட்ஸ்டாக் ஆகிய நான்கு வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவியில்லாமல் சிகரத்தை அடைந்தனர். இதன்மூலம், ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் குழு என்ற சாதனையை ராணுவ வீரர்கள் குழு படைத்துள்ளது. மேலும் 3 வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவியுடன் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர். இதுகுறித்து பேசிய கர்னல் விஷால் தூபே, ஆக்சிஜன் சிலிண்டர் உதவியில்லாமல் எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்காக 10 வீரர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், இந்த முயற்சியில் 4 வீரர்கள் அந்த சாதனையை படைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார். வீரர்கள் குழுவுடன் சென்ற 6 வழிகாட்டி வீரர்களும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவியில்லாமல் சிகரத்தை அடைந்தனர். உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 4,000-த்துக்கும் மேற்பட்டோர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளனர். அவர்களில் 187 பேர் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியில்லாமல் சிகரத்தில் ஏறியுள்ளனர். குழு என்ற வகையில் இந்திய ராணுவ வீரர்கள் குழுவே ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் முதன்முதலாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதித்துள்ளது. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய ராணுவ வீரர்கள் குழு மே 21ம் தேதி நேபாள தலைநகர் காத்மாண்டுவை அடைந்தது.