இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது மனைவியும் - நடிகையுமான அனுஷ்கா ஷர்மா தம்பதியர் முன்கள பணியாளர்களுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர். இருவரும் அவரவர் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளனர்.
“அனைத்து சுகாதார மற்றும் முன்கள பணியார்களுக்கும் நன்றி என்பதை சொல்வதை தவிர வேறு எதுவும் எங்களிடம் சொல்வதற்கு இல்லை. நம்மை காக்க அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர். அவர்களது அர்பணிப்பை கண்டு நாங்கள் பிரமிப்பு கொள்கிறோம்.
அதோடு இந்த கடினமான சூழலில் அடுத்தவர்களுக்கு உதவும் நல்லுள்ளம் கொண்டவர்களுக்கு எங்களது நன்றிகள். இந்தியாவுக்கு உங்களை போன்ற நிஜ ஹீரோக்கள் இருப்பது பெருமை. ஜெய் ஹிந்த்!” என தெரிவித்துள்ளனர்.