இந்தியா

கொரோனா உயிரிழப்புகள் - உதவித் தொகையை நிர்ணயிக்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கொரோனா உயிரிழப்புகள் - உதவித் தொகையை நிர்ணயிக்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

webteam

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படவேண்டிய குறைந்தபட்ச உதவித் தொகை குறித்து 6 வாரத்திற்குள் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்புக்கும் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு, மனுதாரர் கோரியதுபோல் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயிக்க விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். எவ்வளவு தொகை வழங்கவேண்டும் என்பதை மத்திய அரசின் அதிகாரத்திற்கு விட்டுவிடுவதாக அவர்கள் கூறினர்.

இறப்பு சான்றிதழில் தேதியும் கொரொனாவால் உயிரிழந்திருந்தால் அது தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். இறப்பு சான்றிதழ் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்தவேண்டும் என்றும் நிதி கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் மயான பணியாளர்களுக்கு ஒரு காப்பீட்டு திட்டதை உருவாக்குவதை பரிசீலிக்கவேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.