கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட், மஞ்ச்ள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களுக்கு, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கடல் தகவல் சேவைகள் மையம், கேரள கடற்கரை பகுதிகளில் அதி உயரத்தில் அலைகள் எழலாம் என எச்சரித்துள்ளது. 22 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது. வரும் 24 ஆம் தேதி வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால், இந்தியாவின்