இந்தியா

எதிர்க்கட்சிகள் சார்பாக மீராகுமார் இன்று வேட்புமனு தாக்கல்

எதிர்க்கட்சிகள் சார்பாக மீராகுமார் இன்று வேட்புமனு தாக்கல்

webteam

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீராகுமார், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில், ஆளும் பாஜக சார்பாக, பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில், மக்களவை முன்னாள் சபாநாயகரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மீராகுமார் நிறுத்தப்பட்டார். அவர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

மீராகுமாருக்கு காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.