மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசமைப்பு சட்ட திருத்த மசோதா, யூனியன் பிரதேசங்கள் சட்ட திருத்த மசோதா என இரண்டு மசோதாக்களை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இன்று மக்களவையில் அறிமுகம் செய்திருக்கிறார். இதற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் போன்ற I.N.D.I.A. கூட்டணிகளின் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் தெலுங்கு தேசம் உட்பட சில கட்சிகள் தங்களது ஆதரவை வழங்கியுள்ளனர்.
எதிர்க்கட்சியினர் பதிவுசெய்த எதிர்ப்பின் விவரத்தை, இங்கே காணலாம்...
“ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா கூட்டாட்சி அரசமைப்புக்கு எதிரானது” என்றார்.
“அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கே எதிரானது இந்த மசோதா. இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்க்குலைக்க சதி நடக்கிறது” என்றார்.
“ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை ஒருபோதும் ஏற்க முடியாது. மசோதா தேர்தல் சீர்திருத்தம் அல்ல, ஒருவரின் விருப்பத்தை பூர்த்தி செய்வதாக உள்ளது.
அனைத்து அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துவிட முடியுமா?” என்றார்.
“ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதே திமுகவின் நிலைப்பாடு” என்றார்.
இப்படி பலத்த எதிர்ப்புகள் கிளம்பும் நிலையில், இந்த மசோதாவை நாடாளுமன்ற சிறப்புக்குழு பரிசீலனைக்கு அனுப்ப அவை பரிந்துரை செய்வதாக தெரிகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் இதுபற்றி கூறுகையில், “அங்கு நடைபெறும் விரிவான விவாதத்தின் போது அனைத்து கட்சியினரும் விரிவாக விவாதிக்கலாம்” எனக் கூறினார்.
அங்கு ஒப்புதல் வாங்கிய பிறகு மீண்டும் மசோதாக்கள் மக்களவைக்கு திரும்பி வரும் என்கிற யூகத்தை மத்திய அரசு எடுத்திருக்கிறது. இருப்பினும் ஒருவேளை இந்த மசோதாவிற்கு ஒப்புதல் கிடைத்தாலும் 2034 முன்பு இது அமலுக்கு வர வாய்ப்பு இல்லை என்றுதான் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கூட்டுக்குழுவுக்கு கட்டாயம் அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால், அதற்காக அவையில் வாக்கெடுப்பு நடந்தது. அதில் 220 உறுப்பினர்கள் அனுப்ப வேண்டுமென ஆதரவும், 149 பேர் வேண்டாமென எதிர்ப்பும் தெரிவித்தனர். இதன்மூலம், கூட்டுக்குழுவு பரிசீலனைக்கு இந்த மசோதா செல்லும் என்றே சொல்லப்படுகிறது.