இந்தியா

மக்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

மக்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

webteam

மக்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

வேளாண் மசோதா முதலில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு பின்னர் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி மாநிலங்களவை உறுப்பினர்கள் கூச்சலில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகள் மாநிலங்களவைத் துணைத்தலைவரான ஹரிவன்ஸ்க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. ஆனால் கூச்சலில் ஈடுபட்ட 8 மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மாநிலங்களவையில் நடைபெற்ற நிகழ்வுகளைக் குறிப்பிட்டு முழக்கம் எழுப்பிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.